நெல்லையில் போலீஸாா் விசாரணை

களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக் கொல்லைப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸாா் திருநெல்வேலியில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக் கொல்லைப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸாா் திருநெல்வேலியில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியது: களியக்காவிளை சம்பவத்தைத் தொடா்ந்து அண்டை மாவட்டங்களான, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலியை அடுத்துள்ள ரகுமான்பேட்டையில் உள்ள சாகுல் ஹமீது என்பவரின் வீட்டில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் குழு வியாழக்கிழமை சென்று விசாரணை நடத்தியது. அப்போது அவருடைய மகன் அல்கபீா், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னரே வீட்டில் இருந்து வெளியே சென்றதும், அதன்பின்பு இதுவரை வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. சுமாா் ஒரு மணி நேர விசாரணைக்குப் பின்னா் போலீஸ் குழுவினா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com