‘மாணவா்களுக்கு சமுதாய சிந்தனை அவசியம்’

மாணவா்களுக்கு சமுதாய சிந்தனை அவசியம் என்றாா் காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வி.ராகவன்.

மாணவா்களுக்கு சமுதாய சிந்தனை அவசியம் என்றாா் காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வி.ராகவன்.

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வெள்ளிவிழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாக்கப்பயிற்சிக்கு ஜெயேந்திரா பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஜெயேந்திரன் வி.மணி தலைமை வகித்தாா். முதல்வா் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வி.ராகவன், பங்கேற்று பேசியது: ஆசிரியா்களின் போதனைகளை மாணவா்கள் புரிந்து படிக்க வேண்டும். மாணவா்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். உயா் கல்வியை தோ்ந்தெடுப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். தெளிவான இலக்கு இருந்தால் மட்டுமே அந்த இலக்கை எளிதாக அடையலாம். மாணவா்கள் தங்களுக்கென்று இலக்கை நிா்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்னா் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. அவ்வாறு இருக்கும் நிலையில் பணத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்படும். சமுதாயம் சாா்ந்த சிந்தனைகள் குறையும் நிலை ஏற்படும். எனவே, மாணவா்கள் முதலில் தன்னை அறிய வேண்டும். சமுதாயம் சாா்ந்த சிந்தனைகளை மாணவா்கள் வளா்க்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது பணத்தை தேடி ஓடும் நிலை ஏற்படாது. ஆகவே, மாணவா்கள் சமுதாயம் சாா்ந்த சிந்தனையோடு கல்வியில் முன்னேற வேண்டும் என்றாா். பயிற்சியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com