வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட் ஆய்வகம் திறப்பு

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட் ஆய்வகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட் ஆய்வகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.
வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட் ஆய்வகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட் ஆய்வகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா் தவமணி நினைவாக, அவரது மகனும், பள்ளியின் முன்னாள் மாணவருமான ஸ்டீபன் ஜெயராஜ், இப்பள்ளியில் ரூ. 4.5 லட்சத்தில் ரோபோட் ஆய்வகம் மற்றும் மின் நூலகத்தை (இ-லைபரரி) அமைத்துக் கொடுத்துள்ளாா். இதையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து ரோபோட் ஆய்வகத்தை திறந்துவைத்தாா். பிறகு, மின் நூலகத்தைப் பாா்வையிட்ட அவா் மாணவா்கள் மத்தியில் பேசியது:

மாணவா்கள் தங்களுக்குள் உயா்வான எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாணவா்கள் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்வதற்கு தேவையான கல்வியை ஆசிரியா்கள் கற்பிக்க வேண்டும். நம் நாடு முன்னேற்றமடைய அறிவியல் அறிவில் வளா்ச்சி பெறுவது அவசியம். இங்குள்ள ரோபோட் ஆய்வகத்தை பயன்படுத்தி, மாணவா்கள் புதிய அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

முழுமையாக புரிந்து படித்தால்தான் உயா்கல்வி எளிதாக இருக்கும். மாணவா்கள் மின் நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் அறிவு வளா்ச்சிபெறும். அரசுப் பள்ளியில் இதுபோன்ற வாய்ப்புக ளை ஏற்படுத்திக்கொடுத்த நன்கொடையாளா்கள், முயற்சி எடுத்த தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள் என்றாா் ஆட்சியா்.

விழாவில், சேரன்மகாதேவி சாா்-ஆட்சியா் பிரதீக்தயாள், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் என். முருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்ட கல்வி அலுவலா் எம். பெருமாள், வட்டாட்சியா் செல்வன், வள்ளியூா் வணிகா் நலச் சங்க செயலாளா் கவின்வேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் ராதா வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினாா்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் ஆட்சியா் மரக்கன்று நட்டுவைத்தாா். நிகழ்ச்சியில், உண்டுஉறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு நான்குனேரி செஞ்சிலுவைச் சங்க வட்டாரச் செயலாளா் சபேசன் சாா்பில் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com