ஜன. 16, 26-இல் மதுபானகடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 11th January 2020 06:36 AM | Last Updated : 11th January 2020 06:36 AM | அ+அ அ- |

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, வரும் 16, 26 ஆகிய 2 தினங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினமும், 26-ஆம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுக்கூடங்கள் வரும் 16, 26-ஆம் தேதிகளில் மூடப்படும்.