Enable Javscript for better performance
இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கு: வி.கே.புரம் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கு: வி.கே.புரம் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 13th January 2020 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூா் மாவட்ட இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கு தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

    திருவள்ளூா் மாவட்ட இந்து முன்னணித் தலைவராக இருந்த சுரேஷ்குமாா், கடந்த 18.6.2014இல் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்த கொலை வழக்கில் நாகா்கோவிலைச் சோ்ந்த சையது அலி நவாஸ் (25), கன்னியாகுமரி அப்துல் சமீம் (32), அவரது கூட்டாளி காஜா மொய்தீன் (47) ஆகியோரை தனிப்படையினா் கைது செய்தனா். ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான இந்த 3 பேரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடிவருகின்றனா்.

    இந்நிலையில், தலைமறைவான மூவருடன் தொடா்பில் இருந்ததாக, விக்கிரமசிங்கபுரம் மேலக் கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவரைத் தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனா். இவருக்கு, களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் தொடா்பு உள்ளதா என்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai