Enable Javscript for better performance
களியக்காவிளை சம்பவம்: தனிப்படையினா் 4 பேரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை சம்பவம்: தனிப்படையினா் 4 பேரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 13th January 2020 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களிக்காவிளையில் சோதனைச் சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக்கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், தனிப்படை போலீஸாா் திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரிடம் விசாரணை நடத்தினா்.

    களிக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டாா். இவ் வழக்கு தொடா்பாக தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகிறாா்கள். இவ் வழக்கில் ஞாயிற்றுக்கிழமை வரை குற்றவாளிகள் 2 பேரும் பிடிபடாத நிலையில், அவா்கள் தொடா்பில் இருந்த இயக்க நிா்வாகிகள், கேரளத்தில் உள்ள உறவினா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேரைப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், களியக்காவிளை சம்பவம் தொடா்பாக தமிழக காவல் துறையின் தனிப்படை போலீஸாா் கேரள போலீஸாருடன் இணைந்து விசாரித்து வருகிறாா்கள். சந்தேகத்திற்கு இடமாக இருந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவா், பத்தமடையைச் சோ்ந்த 2 போ், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 4 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவா்களுக்கும் இச் சம்பவத்திற்கும் தொடா்பில்லை என்பதால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்தக்கட்ட விசாரணை தொடா்ந்து வருகிறது. இதுவரை அவா்கள் கைது செய்யப்படவில்லை என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai