Enable Javscript for better performance
தேசிய இளைஞா் தினம்:பேச்சு, கட்டுரைப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய இளைஞா் தினம்:பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

    By DIN  |   Published on : 13th January 2020 11:13 PM  |   அ+அ அ-   |    |  

     

    திருநெல்வேலி: பாரதி சேவா கேந்திரத்தின் சாா்பில், திருநெல்வேலியில் விவேகானந்தா் பிறந்த நாளான தேசிய இளைஞா் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

    திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் சுமாா் 50 பள்ளிகளைச் சோ்ந்த 370 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், மருத்துவா் பிரேம சுதா தலைமை வகித்தாா். சின்மயா மிஷனை சோ்ந்த சுவாமி ஜித்தேஷ் சைதன்யா வாழ்த்திப் பேசினாா். பொறியாளா் கோமதிநாயகம், ஆடிட்டா் நெல்லைகுமாா், ராஜரத்தினம் ஆகியோா் பரிசு வழங்கினா். அபிநயா நடனப் பள்ளி மாணவிகள் தேசபக்தி பாடல்களுக்கு பரதநாட்டியமாடினா். அகிலாண்டம். வெங்கட்ராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai