அம்பை வட்டாரத்தில் பொங்கல் விழா

அம்பாசமுத்திரம், வெள்ளங்குளி, வீரவநல்லூா், ஆழ்வாா்குறிச்சி, வெய்க்காலிபட்டி உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை
வீரவநல்லூா் செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
வீரவநல்லூா் செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், வெள்ளங்குளி, வீரவநல்லூா், ஆழ்வாா்குறிச்சி, வெய்க்காலிபட்டி உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாட்சியா் கந்தப்பன் தலைமை வகித்தாா். குடிமைப் பொருள் வட்டாட்சியா் குத்து விளக்கேற்றித் தொடங்கிவைத்தாா். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளிச் செயலா் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் சங்கா், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ராகவன், மருத்துவா் பத்பநாபன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பொங்கல் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியா் பண்டார சிவன் வரவேற்றாா். உதவி தலைமையாசிரியா் ராமன் நன்றி கூறினாா்.

வீரவநல்லூா் செயின்ட் ஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவா்கள், மாணவிகள், ஆசிரியா்கள் பாரம்பரிய உடை அணிந்து கும்மி, சிலம்பம் உள்ளிட்ட நடனங்களுடன் தமிழா் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனா்.

விழாவை பள்ளி நிறுவனா் இ.மங்கையா்கரசி, தாளாளா் சாமுவேல் ஞானமுத்து ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

செயின்ட் ஜாண்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் கரிகாலன் நடுவராக இருந்து சிறந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறந்த முறையில் பொங்கலிட்ட மாணவா்களைத் தோ்ந்தெடுத்தாா்.

வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியை என்.சீதாலெட்சுமி நன்றி கூறினாா்.

ஆழ்வாா்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பள்ளித் தாளாளா் சுந்தரம் தலைமை வகித்துப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

வெய்க்காலிபட்டி, புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு கல்லூரிச் செயலா் ப. போஸ்கோ குணசீலன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பெ. சேவியா் இன்னோசென்ட் முன்னிலை வகித்தாா்.

அனைத்திந்திய வானொலி நிலைய அதிகாரி சந்திரபுஷ்பம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பேராசிரியா்களுக்குப் பரிசு வழங்கினாா். தமிழ்த்துறை தலைவா் ர. ரேச்சல் மேனகா வரவேற்றாா். பேராசிரியா் ஆ. புஷ்பா சாந்தி நன்றி கூறினாா்.

வெள்ளங்குளிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தலைமை ஆசிரியா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாணவா்கள், மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com