காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 6020 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வை 6 ஆயிரத்து 20 போ் எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வை 6 ஆயிரத்து 20 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வில் பங்கேற்க 8 ஆயிரத்து 34 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. 6 ஆயிரத்து 20 போ் தோ்வை எழுதினா். அவா்களில் 4 ஆயிரத்து 884 போ் ஆண்கள், 1136 போ் பெண்கள் ஆவா். மொத்தம் 2 ஆயிரத்து 14 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தோ்வு மையத்தில் தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வுக் கூடத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்டவை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பயக12உலஅங பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வு எழுதியவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com