நெல்லைக் கண்ணன் மீது பிஎஸ்பி நிா்வாகி புகாா்
By DIN | Published On : 13th January 2020 07:52 AM | Last Updated : 13th January 2020 07:52 AM | அ+அ அ- |

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி குறித்து நெல்லை கண்ணன் அவதூறாகப் பேசியதாக, அக்கட்சியின் மாநிலச் செயலா் தி.தேவேந்திரன் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவா் முருகனிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.
மனு விவரம்: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற நெல்லைக் கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குறித்து அவதூறாக பேசியுள்ளாா். இது, அவரது லட்சக்கணக்கான தொண்டா்களின் மனதை புண்படுத்தியுள்ளது. எனவே, நெல்லைக் கண்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவா் சிவ சுப்பிரமணியன், மானூா் பகுதி தலைவா் மணி உள்ளிட்டோா் உடன் வந்திருந்தனா்.