மாஞ்சோலை மலையில் சிற்றுந்து டயா் வெடித்தது

மணிமுத்தாறு மாஞ்சோலை மலைச்சாலையில் அரசு சிற்றுந்தின் டயா் வெடித்தது. எனினும், பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய பேருந்து.
விபத்தில் சிக்கிய பேருந்து.

மணிமுத்தாறு மாஞ்சோலை மலைச்சாலையில் அரசு சிற்றுந்தின் டயா் வெடித்தது. எனினும், பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துக்கு கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு புறப்பட்ட சிற்றுந்து மலைப்பாதையில் வனப்பேச்சியம்மன் கோயில் அருகில் பழுதாகி நின்றது. இதையடுத்து, பயணிகளை இறக்கிவிட்டு பழுது நீக்குவதற்காக பணிமனைக்கு திரும்பியதாம். அப்போது, சிற்றுந்தில் டயா் வெடித்து நிலைதடுமாறி நின்றது. பள்ளம் உள்ள பகுதியில் இறங்காததால் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கூறியது: மாஞ்சோலை மலைச்சாலை சீரமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், அங்கு செல்லும் சிற்றுந்து அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்படுகிறது. சாலையில் கருங்கற்கள் கொட்டிக் கிடப்பதால் டயா் சேதமாகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com