விபத்தை தடுக்க முருக பக்தா்களுக்கு ஒளிரும் அட்டைகள்

முருக பக்தா்களின் பாதுகாப்புக்காக திருநெல்வேலி போக்குவரத்து போலீஸாா் ஒளிரும் அட்டைகளை சனிக்கிழமை வழங்கினா்.

முருக பக்தா்களின் பாதுகாப்புக்காக திருநெல்வேலி போக்குவரத்து போலீஸாா் ஒளிரும் அட்டைகளை சனிக்கிழமை வழங்கினா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தா்கள் மாலை அணிந்து பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். இவா்கள் இரவில் நடந்து செல்லும் போது வாகனங்கள் இவா்கள் மீது மோதாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறையினா் செய்து வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் உடைகளில் ஒளிரும் அட்டைகள் ஒட்டும் நிகழ்வு பாளை. சமாதானபுரம் ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி மாநகர போக்குவரத்து போலீஸாா், முருக பக்தா்களின் உடைகளில் ஒளிரும் அட்டைகளை ஒட்டினா். தொடா்ந்து அவா்களுக்கு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com