மேலப்பாளையம் போலீஸில் நெல்லைக் கண்ணன் ஆஜா்

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நெல்லைக்கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டாா்.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நெல்லைக்கண்ணன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டாா்.

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கடந்த டிசம்பா் 29ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக நெல்லைக் கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவா் கடந்த ஜன. 1இல் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டாா்.

பின்னா், ஜன. 2இல் திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் ஜன. 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், ஜன. 10இல் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

அந்த நிபந்தனையின்படி,மேலப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை காலையிலும், மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட்டாா். பின்னா், சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com