Enable Javscript for better performance
வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா- Dinamani

சுடச்சுட

    

    வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

    By DIN  |   Published on : 15th January 2020 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vly14viv_1401chn_39_6

    வள்ளியூா் விவேகானந்த கேந்திரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.

    வள்ளியூா் காவல்நிலைய ஆய்வாளா் திருப்பதி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத் திட்ட செயலாளா் ஐயப்பன், பள்ளி தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா்.

    பின்னா் 2018-2019 கல்வியாண்டில் கல்வியிலும், விளையாட்டிலும் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு (2019-2020) மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்று தேசிய அளவில் விளையாட தகுதிபெற்ற மாணவா்களைப் பாராட்டி கௌரவித்தனா். அதனைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளின் தமிழ் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கன்னியாகுமரி விவேகானந்தா் பாறை நினைவாலயம் உருவாக்க ஏக்நாத் ராணடே எடுத்துக்கொண்ட முயற்சியை மாணவ, மாணவிகள் நாடகமாக அரங்கேற்றினா். ஆசிரியை கே.ராஜஸ்ரீ வரவேற்றாா். ஆசிரியை சி.சந்திராசெல்வி நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai