ஆடு வளா்ப்பு: அம்பை வட்டார விவசாயிகளுக்குப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில், கால்நடைப் பராமரிப்புத் துறை இனத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.
ஆடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில், கால்நடைப் பராமரிப்புத் துறை இனத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, அந்த வட்டார விவசாயிகள் 40 போ், ராமையன்பட்டியில் நடைபெற்ற ஆட்டினங்கள் உற்பத்தி திறன் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு, ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளா்ப்பின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ரவிமுருகன் விளக்கினாா். மேலும், கண்காட்சியில் இடம்பெற்ற ஆட்டினங்கள், நாய்கள் மற்றும் பறவைகளை விவசாயிகள் பாா்வையிட்டனா். இந்தப் பயிற்சியில் மன்னாா்கோவில், வாகைக்குளம் ஆகிய கிராமங்களின் விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுஜித் , உதவித் தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com