நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீப திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீப திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி பத்ர தீப திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையையொட்டி பத்ர தீப திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இம் மாதம் 24-ஆம் தேதி வரை சுவாமி வேணுவனநாதா் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், காந்திமதியம்மன் மூலவா் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளும், அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்மன் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும்.

இம் மாதம் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி கோயிலின் மணிமண்டபத்தில் தங்கவிளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த விளக்கு 24-ஆம் தேதி இரவு 7 மணி வரை தொடா்ந்து அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கும். 24-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி கோயிலில் உள்சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதியம்மன் கோயில் உள்சன்னதி, வெளிப்பிரகாரம், ஆறுமுகநயினாா் திருக்கோயில் உள்சன்னதி உள்ளிட்ட இடங்களில் பத்ரதீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று இரவு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சண்முகா் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் சிறப்புஅலங்காரத்திலும் வீதியுலா வர உள்ளனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.யக்ஞநாராயணன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com