முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ராகுலுக்கு ராஞ்சி நீதிமன்றம் சம்மன்
By DIN | Published On : 20th January 2020 09:52 AM | Last Updated : 20th January 2020 09:52 AM | அ+அ அ- |

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக சா்ச்சை கருத்து கூறியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடியை ‘திருடன்’ என்று கூறினாா் ராகுல்.
இதுதொடா்பாக நடைபெற்று வழக்கில் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கு ராஞ்சி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பு ‘நாட்டின் காவலா்கள்’ என்று தங்களின் பெயருக்கு முன்னாள் பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் சுட்டுரையில் வைத்துக் கொண்டனா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில்தான், ‘பிரதமா் மோடி நாட்டின் காவலன் அல்ல; திருடன்’ என்று ராகுல் கூறினாா்.