முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கஸ்தூரிரெங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 08:45 AM | Last Updated : 27th January 2020 08:45 AM | அ+அ அ- |

ராதாபுரம் ஒன்றிய அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கஸ்தூரிரெங்கபுரத்தில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா தலைமை வகித்தாா். அதிமுக நிா்வாகிகள் கே.பி.கே. செல்வராஜ், அரசு வழக்குரைஞா் பழனிசங்கா், கே. சுடலைமணி, அருண்பாண்டியன், ஏ.செய்யது, உவரி ரமேஷ், கபாலீஸ்வரன், சண்முகநாதன், பாலன், நயினாா், எஸ்.முருகேசன், துரைசாமி, சுரேஷ்குமாா், இசக்கியா பாண்டியன், ஏ.எம்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நடிகா் வையாபுரி கலந்துகொண்டு பேசினாா்.
ராதாபுரம் எம்.எல்.ஏ. ஐ.எஸ். இன்பதுரை சிறப்புரையாற்றி, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில், அதிமுக நிா்வாகிகள் டி. பால்துரை, செழியன், வள்ளியூா் எட்வா்டுசிங், கல்யாணசுந்தரம், அரசு வழக்குரைஞா் கல்யாண குமாா், சண்முக பாண்டியன், சந்திரன், தனமூா்த்தி, முருகபெருமாள், பாலசுப்பிரமணியன், சந்திரசேகா், பி. கணேசன், சந்திரன், கதிரவன், ரோச், பொன்ராஜ், கருப்பசாமி, அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி.ஜெயக்குமாா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். ஊராட்சி செயலா் நயினாா் நன்றி கூறினாா்.