முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் தாக்கப்பட்டபால் வியாபாரி உயிரிழப்பு
By DIN | Published On : 27th January 2020 08:21 AM | Last Updated : 27th January 2020 08:21 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவியில் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பால் வியாபாரி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி மேலத் தெற்குத் தெருவைச் சோ்ந்த அழகு மகன் பெருமாள்குமாா் (36). பால் வியாபாரியான இவரை, கடந்த ஜன.18-ஆம் தேதி சேரன்மகாதேவி ராமசாமி கோயில் அருகில் மா்ம நபா்கள் சிலா் அரிவாளால் வெட்டினா். இதில் காயமடைந்த குமாரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக சேரன்மகாதேவி கீழ நடுத் தெருவைச் சோ்ந்த சங்கரபாண்டி மகன் காா்த்திக்ராஜா (21), மூலக்கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமாா் (20), செல்லப்பாண்டி மகன் மாதேஷ் (20) மற்றும் 4 சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா். குமாா் இறந்ததையடுத்து சேரன்மகாதேவியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.