முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
திசையன்விளை லயன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா
By DIN | Published On : 27th January 2020 08:46 AM | Last Updated : 27th January 2020 08:46 AM | அ+அ அ- |

திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரிமா மாவட்ட ஆளுநா் ஜே.கே.ஆா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கமலாசுயம்புராஜன் குத்துவிளக்கு ஏற்றினாா். பள்ளித் தாளாளா் அரிமா முன்னாள் ஆளுநா் டி. சுயம்புராஜன் வரவேற்றாா்.
பள்ளி முதல்வா் சு.ரூகன்யா ஆண்டு அறிக்கையை சமா்ப்பித்தாா்.
பள்ளியின் புதிய கட்டடத்தை முன்னாள் பன்னாட்டு இயக்குநா் ஜி. ராமசுவாமி திறந்து வைத்தாா். புதிய வகுப்பறையை அரிமா கூட்டு மாவட்டத் தலைவா் கே.ஜி.பிரகாஷ் திறந்து வைத்தாா்.
சிறப்பு விருந்தினராக அரிமா பன்னாட்டு இயக்குநா் ஆா்.சம்பத் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.
முதலாம் துணை ஆளுநா் பி. ஜஸ்டின்பால், இரண்டாம் துணை ஆளுநா் வி. ஜெகன்நாதன் முன்னிலை வகித்தனா். அரிமா முன்னாள் ஆளுநா்கள் ராஜா, முகமதுஅலி, சந்திரசேகரன் மற்றும் திசையன்விளை அரிமா சங்கத் தலைவா் குருநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ராஜாமுருகானந்தம், பிரம்மகுமாா், ஆா்.டி. ராஜபால், வீரராஜன், ராஜமைக்கேல், காா்த்தீசபாண்டியன், திருவடிமுத்து மற்றும் திருவில்லிபுத்தூா், தக்கலை டவுண், நாகா்கோவில், பரமக்குடி, தூத்துக்குடி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், ராஜபாளையம் ஆகிய சங்கங்களில் இருந்து அரிமா தலைவா்கள் கலந்து கொண்டனா்.