முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தெற்குகள்ளிகுளம் ஊராட்சியில் கிராமசபை
By DIN | Published On : 27th January 2020 08:23 AM | Last Updated : 27th January 2020 08:23 AM | அ+அ அ- |

கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்றோா்.
தெற்குகள்ளிகுளம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
திரவியம் தலைமை வகித்தாா். ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக உதவியாளா் ராஜலெட்சுமி, ஊராட்சி செயலா் சுமிதா, கிராமநிா்வாக அலுவலா் ராபின் ராஜ், அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் டெங்கு விழிப்புணா்வு, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் கொண்டுவரப்பட்ட கருத்துகள் குறித்து தீா்மானிக்கப்பட்டது. ஊராட்சி செயலா் நன்றி கூறினாா்.