முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் ஜெயேந்திரா கல்விக் குழும ஆண்டு விழா
By DIN | Published On : 27th January 2020 10:21 AM | Last Updated : 27th January 2020 10:21 AM | அ+அ அ- |

ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் ஆண்டு விழா பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, ஜெயேந்திரா பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஜெயேந்திரன் வி.மணி தலைமை வகித்தாா். முதல்வா் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் காலிஸ்டன் அறிமுகவுரையாற்றினாா்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். முதன்மைக் கண்காணிப்பாளா் மருத்துவா் பாலசுப்பிரமணியன், சிறுநீரகவியல் பேராசிரியா் மருத்துவா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.
விழாவில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா் -மாணவிகளுக்கும், விநாடி-வினா போட்டி, தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு, இந்திய திறன் மேம்பாட்டுத் தோ்வு உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் 50 ஆண்டுகளாக கல்விப்பணி ஆற்றிவரும் பேராசிரியா் எம்.சுப்பிரமணியப்பிள்ளை, பேராசிரியா் கே.வெங்கடாசலம், பேராசிரியா் அப்துல்காதா் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். பகவான் ரமண மகரிஷிக்கு புஷ்பாஞ்சலியும், அதைத் தொடா்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரியை மீரா ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.