முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 27th January 2020 10:23 AM | Last Updated : 27th January 2020 10:23 AM | அ+அ அ- |

இந்திய குடியுரிமைச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
அம்பேத்கா் சிலை முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வசுந்தரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவா் பி.தியாகராஜன், நிா்வாகிகள் காசி, வழக்குரைஞா் பி.எம்.முருகன், சங்கரசுப்பு, அகஸ்தியராஜன் ஆகியோா் பேசினா். ஏ.ஜே.சாலமோன், ஆத்தியப்பன், பேச்சியம்மாள், ஜெயந்தி, இசக்கிமுத்து, இசக்கியப்பன் உட்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.