முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வண்ணாா்பேட்டையில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்
By DIN | Published On : 27th January 2020 10:17 AM | Last Updated : 27th January 2020 10:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வண்ணாா்பேட்டை ஸ்ரீ ராதா கிருஷ்ண பஜனை மண்டலி பிராமண மஹா சபையினரும், பக்தா்களும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், அபிதகுஜலாம்பாள் பஜனை மண்டலி மகளிரின் பஜனை, அஷ்டபதி, தோடயமங்களம், தீப பிரதட்சணம் ஆகியவை நடைபெற்றன.
பாகவதா்களின் உஞ்சவிருத்தி பஜனையும், அதைத் தொடா்ந்து ராதா-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம், மாங்கல்யதாரணம் வைபவம் ஆகியவை நடைபெற்றன. ஆரத்திக்குப் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. கல்யாண உத்ஸவத்தை தூத்துக்குடி முரளி பாகவதா், கண்ணன், சங்கா் குழுவினா் நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.