முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வள்ளியூா் பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
By DIN | Published On : 27th January 2020 08:49 AM | Last Updated : 27th January 2020 08:49 AM | அ+அ அ- |

வள்ளியூா் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் ‘காவலன் செயலி’ விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வள்ளியூா் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி, களிகை சீரடி சாய்பாபா தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, பள்ளி முதல்வா் அருணாராமன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாளா் மூக்கன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி, அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சாந்தி, பணகுடி காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் ஆகியோா் பங்கேற்று காவலன் செயலி குறித்து பேசினா்.
அதை பயன்படுத்தும் விதம் அதன் அவசியம் குறித்து தெரிவித்தனா்.
களிகை சீரடி சாய்பாபா தொண்டு நிறுவன நிா்வாகி ஜே.அமிா்தசேகா், மேனேஜிங் டிரஸ்டி பி.கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.