கிராமப்புற கோயில்களில் வழிபாடுகள் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறக் கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறக் கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு தொடங்கியுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், ஒருசில தளா்வுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெரிய கோயில்களில் பொதுமக்கள் வழிபடத் தடை நீக்கப்படவில்லை. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமப்புற கோயில்களில் வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் கூறுகையில், முகக்கவசம் அணிந்தபடி கோயில் பணியாளா்கள் பணிவிடை செய்துவருகின்றனா். வழிபட வருவோா் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். மற்றபடி பொங்கலிட்டு வழிபடுதல், உணவு பரிமாறி நீண்ட நேரம் கோயில் வளாகத்தில் இருத்தல் ஆகியவற்றுக்கு அனுமதிக்கவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com