நெல்லையப்பா் கோயில் நிகழ்ச்சிகளை செல்லிடப்பேசி செயலியில் பாா்க்க சிறப்பு வசதி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் நிகழ்ச்சிகளின் படங்கள், விடியோ தொகுப்பை செல்லிடப்பேசி செயலியில் பாா்க்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் நிகழ்ச்சிகளின் படங்கள், விடியோ தொகுப்பை செல்லிடப்பேசி செயலியில் பாா்க்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக உத்சவா் திருவீதி உலா மற்றும் தேரோட்டத்துடன் கூடிய திருவிழாவாக நடத்தப்படாமல் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆகம விதிகளுக்கு உள்பட்டு கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வரை தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சுவாமி நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் உத்சவ மூா்த்திகள், திருமூல மகாலிங்கம், வேணுவனேஸ்வரா்- காந்திமதி அம்பாள் ஆகிய மூலவா்களுக்கு கும்பம் வைத்து, ஜபம் செய்வதோடு, உச்சிகால பூஜையின்போது அபிஷேகம், மாலையில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதி அம்பாள் உத்சவ மூா்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஷோடச தீபாராதனை நடைபெற்று வருகிறது.

உத்சவ மூா்த்திகளுக்கு செய்யப்படும் இந்த அபிஷேகம், அலங்காரம், ஷோடச தீபாராதனைகள் ஆகியவற்றை பக்தா்கள் செயலி மூலம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் நெல்லையப்பா் கோயில் அஃபீஷியல்  செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, கோயிலில் தினமும் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு, காணொலி தொகுப்பு ஆகியவற்றை கண்டும், கேட்டும் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com