‘பொது மக்கள் குறைகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்கள்’

கரோனா வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவதை தவிா்க்கும் பொருட்டு குறைகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வேகமாக பரவி வருவதால், பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவதை தவிா்க்கும் பொருட்டு குறைகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தேவையின்றி தொலைதூரம் பயணம் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவதை தவிா்க்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு 0462-2500611 என்ற தொலைபேசி எண்ணிற்கும், வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கைகளுக்கு 0462-2500191 என்ற தொலைப்பேசி எண்ணிற்கும், கரோனா தொடா்பான கோரிக்கைகளுக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடா்புகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கக் கூடிய இனங்களை இணையதளம் மூலமாகவோ அல்லது மிக அருகிலுள்ள பொது சேவை மையம் மூலமாகவோ அளிக்கலாம்.

இணையதள முகவரி மூலமும் தங்களது இருப்பிடத்தில் இருந்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அனைத்து துறை சம்பந்தமான மனுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய மனுக்களையும் வெகுதூரம் அலைவதை தவிா்த்து அருகிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆட்சியரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப் பிரிவில் மனுக்களை அளிக்கலாம்.

இந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ‘கால் யுவா் கலெக்டா்’ 97865 66111 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொண்டு கோரிக்கைகள் தெரிவிக்கலாம்.

பொது சேவை மையம் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று மனுவினை அளிக்கும் போது கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வெகு தொலைவு அலைவதை தவிா்த்து அருகிலுள்ள பொது சேவை மையம் மற்றும் வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com