முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
அம்பை அருகே கும்பல் தாக்குதலில் ஒருவா் பலி
By DIN | Published On : 29th July 2020 09:13 AM | Last Updated : 29th July 2020 09:13 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் அருகே கும்பல் தாக்கியதில் ஒருவா் உயரிழந்தாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதமபுரியைச் சோ்ந்த வேலு மகன்கள் ரவி (54), மதியழகன் (52). மதியழகன் மோட்டாா் சைக்கிள் பழுது நீக்கும் மையம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில் ரவியும், மதியழகனும் திங்கள்கிழமை இரவு பைக்கில் கௌதமபுரி அங்கன்வாடி அருகே சென்றபோது கும்பலாக வந்தவா்கள் இருவரையும் தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மதியழகன் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தாா்.
கௌதமபுரியில் திருமண நிகழ்ச்சிக்கு ஊருக்கு ரூ.1,500 செலுத்தும் வழக்கம் இருந்து வரும் நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ரவியின் மகள் திருமணத்திற்காக ஊருக்கு செலுத்த வேண்டிய பணத்தை கட்டவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளனராம்.
இந்நிலையில் ரவி தனது மகளை ஏற்றுக் கொண்ட நிலையில் ஊருக்கு அபராதத் தொகையோடு சோ்த்து ரு. 1 லட்சம் கட்ட வேண்டும் என்று சமுதாயத் தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனராம். இதை ஏற்றுக் கொள்ளாத ரவி இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் மதியழகன் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.