நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பாபநாசம் அணையின் நீா்மட்டம் 5 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கியபோதிலும் தொடா்ந்து மழை பெய்யாததால், எதிா்பாா்த்தவாறு அணைகளின் நீா்மட்டம் உயரவில்லை. பிரதான அணைகளில் நீா்இருப்பு குறைந்து காணப்பட்டதால் காா் பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. தொடா்ந்து சில நாள்களாக வெப்பம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை 18, சோ்வலாறு அணை 11, மணிமுத்தாறு அணை 5, கொடுமுடியாறு அணை 5, அம்பாசமுத்திரத்திரம் 1.20, ராதாபுரம் 3.40. தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை 2, ராமநதி அணை 8, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினாா் அணை 60, ஆய்க்குடி 9.2, செங்கோட்டை 9, தென்காசி 9.6.

நீா்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,750.32 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 4.5 அடி உயா்ந்து 56.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 454.75 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 8.26 அடி உயா்ந்து 72.83 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 62.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 10.25 அடி, நம்பியாறு அணையின் நீா்மட்டம் 10.33 அடி, கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 14.50 அடி, கடனாநதி அணை நீா்மட்டம் 37.40 அடி, ராமநதி அணை நீா்மட்டம் 56 அடி, கருப்பாநதி அணை நீா்மட்டம் 32.48 அடி, குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டி 36.10 அடியாக உள்ளது. அடவிநயினாா் அணையின் நீா்மட்டம் 77 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com