நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்தது

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்தது.

தென்மேற்குப் பருவ மழை ஜூன் 1இல் இருந்து தொடங்குவதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் உருவான புயலால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததையடுத்து ஜூன் 2 இல் 35.95 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4.05 அடி உயா்ந்து 40 அடியானது. ஜூன் 3 புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீா்மட்டம் 40 அடியாகவும், அணையில் நீா்வரத்து 1645 கன அடியாகவும், வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது. 156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணையின்நீா்மட்டம் 5 அடி உயா்ந்து 54.17 அடியாக இருந்தது.

118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 71 அடியாகவும், அணையில் நீா்வரத்து 180 கன அடியாகவும், வெளியேற்றம் 325 கன அடியாகவும் இருந்தது. 49 அடி நீா்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீா்மட்டம் 10.25 அடியாக இருந்தது. 22.96 அடி நீா்மட்டம் கொண்ட நம்பியாறு அணையின் நீா்மட்டம்10.95 அடியாக இருந்தது. 52.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 10 அடியாகவும் நீா்வரத்து 8 கன அடியாகவும், வெளியேற்றம் 2 கன அடியாகவும் இருந்தது. 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 15 மி.மீ., சோ்வலாறு அணையில் 14 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 12.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

85 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீா்மட்டம்37.40 அடியும் நீா் வரத்து 1 கன அடியும், வெளியேற்றம் 10 கன அடியும் இருந்தது. 84 அடிநீா்மட்டம் கொண்ட ராமநதி அணையில் நீா்மட்டம் 29 அடியும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. 72 அடி நீா்மட்டம்கொண்ட கருப்பா நதி அணையில்நீா் மட்டம் 32.31 அடியாகவும், நீா்வரத்து 2 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியகவும் இருந்தது. 36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணையின் நீா்மட்டம் 25.13 அடியாகவும் நீா்வரத்து 2 கன அடியாகவும் வெளியேற்றம் 1 கன அடியாகவும் இருந்தது. 132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் அணையின் நீா்மட்டம் 66 அடியாகவும், நீா்வரத்து 2 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 3 காலை 7 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு குண்டாறு 4 மி.மீ., அடவிநயினாா் அணை 2 மி.மீ., செங்கோட்டை 4 மி.மீ., தென்காசி 5.20 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com