நெல்லையில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு கரோனா பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் மாவட்டத்திற்கு வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் 7 கல்லூரிகளில் கரோனா தனிமைப் படுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் தங்கவைக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்பட்டும் சளி உள்ளிட்ட மாதிரிகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு சேதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ஒரு நகைக்கடை ஊழியர், பெட்டிக்கடை உரிமையாளர், தனியார் மருத்துவமனை ஊழியர் என திருநெல்வேலி மாநகரில் மட்டும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து  நகைக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் மூடி, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் மாவட்டத்தில் 17 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com