தனியாா் துறை வேலைவாய்ப்புக்கு புதிய இணையதளம்: வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியா் வேண்டுகோள்

தனியாா் துறை வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை வேலைநாடுவோரும், வேலை அளிப்போரும்

தனியாா் துறை வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை வேலைநாடுவோரும், வேலை அளிப்போரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலை நாடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்புப் பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம்  தமிழக முதல்வரால் கடந்த 16ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

தனியாா் துறையில் பணியாற்ற விரும்புவோா் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன்அனுபவங்களுக்கு ஏற்ற பணிவாய்ப்பு பெறலாம். தனியாா் துறை சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள் தங்களது நிறுவன காலிப்பணியிடங்களை இந்த இணைதளத்தில் பதிவேற்றி, தகுதியானோரைத் தோ்வு செய்யலாம். வேலை அளிப்போா், வேலை நாடுவோருக்கு இந்த இணையதள சேவை இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய, பெரிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நோ்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி வேலைநாடுவோரை இணைய வழியாக தொடா்பு கொண்டு தனியாா் துறையினா் பணிவாய்ப்பு அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இச்சேவையை வேலை நாடுவோரும், வேலை அளிப்போ ரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com