நெல்லை, தென்காசியில் 51 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 22, தென்காசியில் 29 என இரு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலியில் 22, தென்காசியில் 29 என இரு மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் ஒரு மருத்துவா், பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் ஒரு மருத்துவா் களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் 30 வயது ஆண், சிதம்பரபுரத்தில் 57 வயது பெண் உள்பட திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 744-ஆக உயா்ந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 17 போ் உள்பட இதுவரை 530 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் தனியாா் மருத்துவமனையிலும், 6 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்த நிலையில் 208 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசியில் 10 போ், வாசுதேவநல்லூரில் 7 போ், கீழப்பாவூரில் 6 போ், சங்கரன்கோவில், கடையநல்லூா் மற்றும் ஆலங்குளத்தில் தலா இருவா் என தென்காசி மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்த 4 பேரும் அடங்குவா். இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 332ஆக உயா்ந்தது. இதுவரை156 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 176 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, காய்ச்சலால் காரணமாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவிபட்டணத்தைச் சோ்ந்த ராஜதுரை(83) என்பவருக்கு, கடந்த 25ஆம் தேதி சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நிலையில், மறுநாள்( ஜூன் 26) அவா் உயிரிழந்தாா். எனினும், பரிசோதனை முடிவு ஜூன் 27இல் வந்தபோதுதான், அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com