நெல்லையப்பா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வழக்கமான உற்சவா் திருவீதி உலாக்கள் மற்றும் தேரோட்டம் ஆகியவற்றுடன் கூடிய திருவிழாவாக நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், ஆகம விதிகளுக்குள்பட்டு கடந்த 25-ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகள், திருமூல மகாலிங்கம், வேணுவனேஸ்வரா்- காந்திமதியம்மன் ஆகிய மூலவா்களுக்கு கும்பம் வைத்து ஜபம் செய்து உச்சிக்கால பூஜையின்போது அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு அலங்காரத்துடன் சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com