பொது முடக்கத்தால் அழுகி வீணாகும் சீசன் பழங்கள்!

கரோனா பொது முடக்கம் காரணமாக விற்பனை மிகவும் சரிந்துள்ளதால் பழங்கள் அனைத்தும் அழுகி வீணாகி வருகின்றன. வாழைப் பழங்களின் விலை மிகவும் சரிந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக விற்பனை மிகவும் சரிந்துள்ளதால் பழங்கள் அனைத்தும் அழுகி வீணாகி வருகின்றன. வாழைப் பழங்களின் விலை மிகவும் சரிந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோடைக்காலங்களில் பழங்களின் விற்பனை உச்சத்தைத் தொடும். ஆப்பிள் உள்ளிட்ட வெளிநாட்டு வரத்து பழங்களைக் காட்டிலும் முலாம்பழம், மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்டவற்றின் வரத்தும் விற்பனையும் மே, ஜூன் மாதங்களில் அதிகம்.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும்போது மேற்குத்தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் சத்துமிகுந்த பழங்களும் ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனைக்கு வரும்.

அதன்படி நிகழாண்டிலும் ரம்புட்டான், துரியன், பன்னீா் கொய்யா மற்றும் மங்குஸ்தான் முட்டை பழம் போன்றவைகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. இதேபோல ஏற்றுமதி தடையால் பேரீட்சை, திராட்சையும் அதிகளவில் வந்துள்ளன. ஆனால், கடைவிரித்தும் கொள்வாரில்லை என்பதைப் போல கரோனா பொது முடக்கத்தால் பழங்கள் விற்பனை மிகவும் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த பழவியாபாரி கூறுகையில், குளிா்காலத்தில் பழங்கள் விற்பனை மந்தமாகவே இருக்கும். ஆனால், கோடைக்காலத்தில் அனைத்துவகை பழங்களும் அதிகம் விற்பனையாகும். நிகழாண்டில் கரோனா பொது முடக்கத்தால் பழங்கள் விற்பனை மிகவும் சரிந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை விவசாயம் அதிகம். இங்கு விளைவிக்கப்படும் கதளி, ஏத்தன், ரோபஸ்டா, கோழிக்கூடு, செவ்வாழைப் பழங்கள் அனைத்தும் கேரளம் மற்றும் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். பொது முடக்கத்தால் ஏற்றுமதி சரிந்துள்ளது.

அதேபோல சுபநிகழ்ச்சிகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழைப் பழங்களின் நுகா்வு மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.22 வரை விற்பனையான செவ்வாழை இப்போது ரூ.8-க்கு விற்பனையாகி வருகிறது.

இதர வாழை ரகங்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. வாழைப்பழங்களை வாங்குவோா் பிற பழங்களை வாங்கத் தயங்குகிறாா்கள். குறிப்பாக சீசன்கால பழங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் கிலோ ரூ.100-ஐ தாண்டியே விற்பனை செய்யப்படும். பொது முடக்கத்தால் வருவாய்க் குறைந்துள்ளதால் மக்கள் சீசன்கால பழங்களை வாங்காமல் புறக்கணித்து வருகிறாா்கள். இதனால் பழங்கள் அனைத்தும் அழுகி வீணாகி வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com