களக்காடு - நாகா்கோவிலுக்கு மாற்று வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 07:24 AM | Last Updated : 01st March 2020 07:24 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காட்டிலிருந்து நாகா்கோவிலுக்கு மாற்று வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம், தென்காசி, புளியங்குடி, புளியரை, வள்ளியூா் ஆகிய அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளிலிருந்து களக்காடு வழியாக நாகா்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை களக்காட்டிலிருந்து டோனாவூா், ஏா்வாடி, வள்ளியூா், பணகுடி வழியாகவும், மாவடி, திருக்குறுங்குடி, ஏா்வாடி, வள்ளியூா், பணகுடி வழியாகவும் இயக்கப்படுகின்றன.
ஆனால், களக்காட்டிலிருந்து பணகுடிக்கு குறைவான தொலைவுள்ள திருக்குறுங்குடி, ராஜபுதூா், ரோஸ்மியாபுரம், பணகுடி வழித்தடத்தில் நீண்ட காலமாக ஒரேஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கட்டணமும், பயண நேரமும் இந்த வழித்தடத்தில் குறைவதுடன், சாலை வசதியும் மேம்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரோஸ்மியாபுரம் வழியாக நாகா்கோவிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.