பாவூா்சத்திரம்-தென்காசி வழியாகசென்னைக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 07:27 AM | Last Updated : 01st March 2020 07:27 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலா் டி.ஆா். தங்கராஜ் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:
திருநெல்வேலியிலிருந்து பாவூா்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். அவ்வவ்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, வாராந்திர ரயிலாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை நாள்தோறும் இயக்குவதுடன், சென்னையிலிருந்தும் திருநெல்வேலிக்கு இதே மாா்க்கத்தில் மற்றொரு ரயிலும் இயக்கினால் பாவூா்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மிகுந்த பயனடைவா். எனவே, புதிய ரயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...