முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
By DIN | Published On : 03rd March 2020 06:10 AM | Last Updated : 03rd March 2020 06:10 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலா்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, திருநெல்வேலி மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநா் பொ.கணேசன் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் சி.முருகேசன் முன்னிலை வகித்தாா். தணிக்கையின் தரத்தை மேம்படுத்துதல், பொது கணக்கில் தகவல் மேலாண்மை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. கூட்டுறவு தணிக்கை அலுவலா் சிவ.நக்கீரன் நன்றி கூறினாா். இத் தகவலை திருநெல்வேலி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் ஆ.ரேவதி சங்கா் தெரிவித்தாா்.