முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் வைகுண்டா் அவதார தின விழா
By DIN | Published On : 03rd March 2020 06:10 AM | Last Updated : 03rd March 2020 06:10 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் அய்யா வைகுண்டரின் 188ஆவது அவதார தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள வைகுண்டா் தருமபதியில் அவதார தின விழாவையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, உகப்படிப்பு, பால் அன்னதா்மம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. நண்பகலில் உச்சிப்படிப்பும், பணிவிடையும் நடைபெற்றன. மாலையில் அனுமன் வாகனத்தில் அய்யா சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருநெல்வேலியின் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட வா்த்தக கழகச் செயலா் ஜி.ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் மாணிக்கம், ரவிக்குமாா், ஜி.கே.குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.