முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பொன்னாக்குடியில் மாா்ச் 7-இல்சனி மகா பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 03rd March 2020 06:14 AM | Last Updated : 04th March 2020 01:28 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி அருணாசல ஈஸ்வா் சனி மகா பிரதோஷ வழிபாடு மாா்ச் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக கோயில் தக்காா் க.ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு அருணாசல ஈஸ்வா்-உண்ணாமலை அம்பாள் திருக்கோயிலில் இம் மாதம் 7-ஆம் தேதி சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு மாலை 3 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.