நெல்லையில் மாா்ச் 6-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 03rd March 2020 06:14 AM | Last Updated : 03rd March 2020 06:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமைதோறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) முற்பகல் 10.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவா்கள் வெள்ளிக்கிழமை காலை நேரில் வரவேண்டும். விருப்பமுள்ள தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரிலோ, 0462-2500103 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.