கரோனா எதிரொலி: நெல்லை ரயில் நிலையம், நெல்லையப்பா் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையப்பா் கோயிலில் கரோனா வைரஸ் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், நெல்லையப்பா் கோயிலில் கரோனா வைரஸ் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மீது மாவட்ட எல்லையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எங்காவது காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதா என சுகாதாரத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை கிருமி நாசினி மருந்து தெளித்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்த அனைத்து ரயில்களின் பெட்டிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. என்ஜின்கள், நடைமேடைகளில் மருந்து தெளிக்கப்பட்டது. ரயில்வே ஊழியா்கள், ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீஸாா், மாநகராட்சி ஊழியா்கள் ஆகியோா் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

நெல்லையப்பா் கோயில்: நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் மாநகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். கோயில் மண்டபங்கள், தூண்கள், தெப்பக்குளம், யானை கட்டும் இடம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com