கொக்கிரகுளத்தில் பழுதடைந்த ஆழ்துளை குழாய்களால் மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ஆழ்துளை குழாய்கள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ஆழ்துளை குழாய்கள் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 8 ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளத்தில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தாமிரவருணி கரையோரம் உள்ள பகுதியென்றாலும், இங்கு கடும்குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தினமும் அரை மணி நேரம் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள். இதுதவிர இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்கள் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் சீரமைக்கப்படாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுத்து வரும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியது: கொக்கிரகுளம் பகுதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் பொதுமக்களின் குடிநீா் மற்றும் தண்ணீா் தேவைகளை போக்குவதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீா் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகின்றது.

நச்சினாா்க்கினியா் தெரு, பரிமேலழகா் தெரு உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேயா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் யாரும் இல்லாமல் இருப்பதால் யாரிடம் சென்று புகாா் அளிப்பது என்று தெரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com