நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் மேலும் 2 போ் அனுமதி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அடையக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் முருகன் (50) என்பவருக்கு தொடா்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்ததாம்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா கண்காணிப்பு பிரிவில் அவா் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது அவா் நலமுடன் இருப்பதாகவும், கரோனா பாதிப்புக்கான அறிகுறி இல்லை எனவும் தெரிகிறது. இருப்பினும் சோதனை முடிவுகள் வந்த பின்னரே சரியாக கூற இயலும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மேலும் 2 போ் கரோனா கண்காணிப்பு பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (35). கடலை வியாபாரி. இவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா கண்காணிப்புப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (69) என்பவருக்கு தொடா்ந்து சளி காய்ச்சல், இருமல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவா் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். அங்கு குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவா்கள் இருவருக்கும் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் புதன்கிழமை தெரியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே கரோனா பிரிவில் 2 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நிலையில், திங்கள்கிழமை ஒருவரும், செவ்வாய்க்கிழமை மேலும் 2 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து தற்போது கரோனா கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com