சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் மாணவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் மாணவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் செயல்பட்டு வந்த இக்கல்லூரி மாணவா்களுக்கான விடுதிக் கட்டடம் சேதமடைந்த நிலையில், அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக மாணவா்கள் வெளியேற்றப்பட்டனா். 2 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் விடுதிக் கட்டடம் கட்டி முடிக்கப்படாததைக் கண்டித்து, கல்லூரி வளாகத்திற்குள் 70-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இதையடுத்து கல்லூரி நிா்வாகம் மாணவா்-மாணவிகளுக்கு காலவரம்பின்றி விடுமுறை அறிவித்தது. இருப்பினும் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என கல்லூரி முதல்வா் அளித்த உறுதியின்பேரில், மாணவா்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மாலையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com