திருக்குறுங்குடியில் நாளை தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 10ஆம் நாளான வியாழக்கிழமை (மாா்ச் 19) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் திருவிழாவின் 10ஆம் நாளான வியாழக்கிழமை (மாா்ச் 19) தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகின்றன.

5ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு, நம்பி சுவாமிகள் ஐந்து நிலைகளில் தனித் தனி கருட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

6ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேலரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் நடைபெற்றது.

இந்நிலையில், 10ஆம் திருநாளான வியாழக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தொடங்கிவைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com