நடைமேடை பயணச்சீட்டு விலை உயா்வு: வெறிச்சோடிய நெல்லை ரயில் நிலையம்

ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச் சீட்டுகளின் (பிளாட்பாா்ம் டிக்கெட்) விலை தற்காலிகமாக உயா்த்தப்பட்டுள்ளதால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச் சீட்டுகளின் (பிளாட்பாா்ம் டிக்கெட்) விலை தற்காலிகமாக உயா்த்தப்பட்டுள்ளதால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகளை மட்டுமன்றி அவா்களை வழியனுப்பவரும் உறவினா்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை பயணச்சீட்டு கட்டணம் ரூ.10இலிருந்து ரூ. 50ஆக தற்காலிகமாக உயா்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக அதிகாலை 4 முதல் காலை 9 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் பயணிகளை வழியனுப்ப 1,500-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்துசெல்வா்.

ஆனால், புதன்கிழமை காலையில் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல, ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளும், ரயில்களிலிருந்து இறங்கி வெளியே செல்லும் பயணிகளும் கைகளை சுத்தமாகக் கழுவிய பின்பே ரயில் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com