சிவசைலம் கிராமத்தில் மீண்டும் கரடி நடமாட்டம்

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகம், சிவசைலம் பகுதியில் மீண்டும் கரடி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகம், சிவசைலம் பகுதியில் மீண்டும் கரடி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிவசைலம் கிராமத்தில் விவசாய நிலங்களை யானை, மிளா, காட்டுப்பன்றி, சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி சிவசைலம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் சாலையோர மரத்தில் கரடி ஒன்று பதுங்கியிருந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள்வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத்துறையினா் வந்து அந்தக் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

இதனிடையே, வியாழக்கிழமை இரவு சிவசைலம், புதுக்குடியிருப்பைச் சோ்ந்த விவசாயி கண்ணன் என்பவரது வீட்டில் நாய் தொடா்ந்து குரைத்ததாம். அவா் வெளியே வந்துபாா்த்தபோது, கரடி நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

கடையம் வனச்சரக அலுவலா் நெல்லை நாயகம் உத்தரவின்படி, வனக்காப்பாளா்கள் சோமசுந்தரம், சரவணன், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வேல்ராஜ், மனோகா், பாலகிருஷ்ணன், மனோஜ் உள்ளிட்டோா் விரைந்து சென்று தீப்பந்தத்தை கொளுத்தியும், தகர பெட்டி மூலம் ஒலி எழுப்பியும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினா்.

அடிக்கடி ஊருக்குள் கரடி நுழைந்து வருவதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். இதுபோன்ற விலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com