வள்ளியூா், பணகுடியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்

கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கையாக, வள்ளியூா், பணகுடி பகுதிகளில் கோயுல்கள், தேவாலயங்களில் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கையாக, வள்ளியூா், பணகுடி பகுதிகளில் கோயுல்கள், தேவாலயங்களில் வழிபாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த உலகத்தையே அச்சத்துக்குள்ளாக்கியுள்ள கரோனா வைரஸை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா் அருகேயுள்ள திருமலாபுரம், வடக்கன்குளம், க ாவல்கிணறு, ஆவரைகுளம், பழவூா் ஆகிய ஊா்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவா்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்ட நிலையில் கடைவீதிகள், தினசரி சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி, வள்ளியூரில் உள்ள முருகன் கோயில், சுந்தரபரிபூரண பெருமாள் கோயில், மீனாட்சி சொக்கநாதா் கோயில், சிவன் கோயில், பணகுடி சிவகாமி அம்மன் நம்பிசிங்க பெருமாள் கோயில், ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்திய மருத்துவச் சங்கத்தின் வள்ளியூா் கிளை மருத்துவா்கள், வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவிகள், தெற்குகள்ளிகுளம் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் ஆகியோா் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனா்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழப்பாவூா் அருள்மிகு ஸ்ரீஅலா்மேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீப்ரசன்ன வெங்கடாஜலபதி, ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயில், அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயில் ஆகியவற்றில் மாா்ச் 31 வரை பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஆகம விதிப்படியான கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com